அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப்

external-link copy
13 : 3

قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ— فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ— وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟

(பத்ர் போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் (நம்பிக்கைக் கொண்டு) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொரு கூட்டம் (அல்லாஹ்வை) நிராகரிக்கக்கூடியது. (அதிக எண்ணிக்கையில் இருந்த) இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தனது உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது. info
التفاسير: