அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப்

பக்க எண்:close

external-link copy
31 : 22

حُنَفَآءَ لِلّٰهِ غَیْرَ مُشْرِكِیْنَ بِهٖ ؕ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّیْرُ اَوْ تَهْوِیْ بِهِ الرِّیْحُ فِیْ مَكَانٍ سَحِیْقٍ ۟

அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக, அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக இருங்கள். இன்னும், எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, (அவர் இறந்த) பிறகு பறவைகள் அவரை கொத்தி தின்றதைப் போன்று; அல்லது, காற்று அவரை தூரமான இடத்தில் வீசி எறிந்ததைப் போன்று ஆவார். info
التفاسير:

external-link copy
32 : 22

ذٰلِكَ ۗ— وَمَنْ یُّعَظِّمْ شَعَآىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَی الْقُلُوْبِ ۟

இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும். info
التفاسير:

external-link copy
33 : 22

لَكُمْ فِیْهَا مَنَافِعُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ مَحِلُّهَاۤ اِلَی الْبَیْتِ الْعَتِیْقِ ۟۠

(அல்லாஹ்வின் புனித அடையாளங்கள், குர்பானி பிராணிகள் ஆகிய) இவற்றில் குறிப்பிட்ட ஒரு காலம்வரை உங்களுக்கு பலன்கள் உள்ளன. பின்னர் அவற்றை அறுப்பதற்குரிய (ஹலாலான) இடம் அல் பைத்துல் அதீக் (-புனித எல்லை) ஆகும். info
التفاسير:

external-link copy
34 : 22

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ— فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ— وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ

(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிராணியை (அல்லாஹ்விற்காக அறுத்து) பலியிடுவதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகள் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூர்வதற்காக (கால் நடைகளை பலியிடுவதை ஏற்படுத்தினோம்). ஆக, நீங்கள் வணங்க வேண்டிய கடவுள், ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து விடுங்கள். இன்னும், (நபியே! அல்லாஹ்விற்கு) பயந்து பணிந்து கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
35 : 22

الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِیْنَ عَلٰی مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِیْمِی الصَّلٰوةِ ۙ— وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟

(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயத்தால் நடுங்கும். இன்னும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் மீது பொறுமையாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். info
التفاسير:

external-link copy
36 : 22

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَآىِٕرِ اللّٰهِ لَكُمْ فِیْهَا خَیْرٌ ۖۗ— فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهَا صَوَآفَّ ۚ— فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ؕ— كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம். info
التفاسير:

external-link copy
37 : 22

لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ— كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ— وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟

அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான், அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு பணிய வைத்தான், அல்லாஹ்வை - அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக - நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. இன்னும், (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிபவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
38 : 22

اِنَّ اللّٰهَ یُدٰفِعُ عَنِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ ۟۠

நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டவர்களை (பாதுகாத்து, அவர்களை) விட்டும் (நிராகரிப்பாளர்களை) தடுத்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மோசடிக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் நேசிக்க மாட்டான். info
التفاسير: