அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு

அல்அஃலா

சூராவின் இலக்குகளில் சில:
تذكير النفس بالحياة الأخروية، وتخليصها من التعلقات الدنيوية.
மறுமை வாழ்வைக்கொண்டு ஆன்மாவுக்கு ஞாபகமூட்டலும், உலகத் தொடர்புகளை விட்டும் அதனை விடுவித்தலும் info

external-link copy
1 : 87

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ

87.1. தனது படைப்பினங்களுக்கு மேல் உயர்ந்துவிட்ட உம் இறைவனை ஞாபகம் செய்து மகத்துவப்படுத்தும் போது அவனது பெயரை மொழிந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக. info
التفاسير:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• تحفظ الملائكة الإنسان وأعماله خيرها وشرها ليحاسب عليها.
1. வானவர்கள் மனிதனின் விசாரணைக்காக அவனது நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தையும் பாதுகாக்கிறார்கள். info

• ضعف كيد الكفار إذا قوبل بكيد الله سبحانه.
2. அல்லாஹ்வின் சூழ்ச்சியோடு ஒப்பிடுகையில் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி பலவீனமானதாகும். info

• خشية الله تبعث على الاتعاظ.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அறிவுரை பெற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. info