அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு

பக்க எண்:close

external-link copy
26 : 76

وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟

76.26. இரவு நேரத் தொழுகைகளான மஃரிப், இஷா தொழுகைகளின் மூலம் அவனை நினைவுகூர்வீராக. அது இரண்டிற்கும் பிறகு இரவில் எழுந்து தொழுவீராக. info
التفاسير:

external-link copy
27 : 76

اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟

76.27. நிச்சயமாக இந்த இணைவைப்பாளர்கள் உலக வாழ்க்கையின் மீது மோகம் கொண்டு தங்களுக்குப் பின்னால் வரக்கூடிய மறுமை நாளை விட்டுவிடுகிறார்கள். துன்பங்களும் சோதனைகளும் அடங்கியுள்ளதனால் அது கனமான நாளாகும். info
التفاسير:

external-link copy
28 : 76

نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ— وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟

76.28. நாமே அவர்களைப் படைத்து அவர்களின் மூட்டுகளையும் உறுப்புகளையும் இன்ன பிறவற்றையும் பலப்படுத்தி அவர்களின் எடம்பைப் பலப்படுத்தினோம். நாம் அவர்களை அழித்து அவர்களுக்குப் பதிலாக அவர்களைப் போன்றவர்களை ஏற்படுத்த நாடினால் அவ்வாறு அழித்து அவர்களை மாற்றியிருப்போம். info
التفاسير:

external-link copy
29 : 76

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟

76.29. நிச்சயமாக இந்த அத்தியாயம் அறிவுரையும் நினைவூட்டலுமாகும். யார் தன் இறைவனின் திருப்தியின்பால் இட்டுச் செல்லும் வழியை தெரிவு செய்ய நாடுகிறாரோ அவர் அதனை எடுத்துக்கொள்வார். info
التفاسير:

external-link copy
30 : 76

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

76.30. ஆயினும் உங்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வேறு யாராலும் அந்த வழியை தெரிவு செய்ய இயலாது. ஏனெனில் அனைத்து விவகாரங்களும் அவனிடமே உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு பயன்தரக்கூடியதையும் அவர்களுக்கு பயன்தராதவற்றையும் நன்கறிந்தவன். தன் படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டங்களிலும் அவன் ஞானம் மிக்கவன். info
التفاسير:

external-link copy
31 : 76

یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠

76.31. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை தன் அருளில் பிரவேசிக்கச் செய்து அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கும் நற்செயல் புரிவதற்கும் அருள்புரிகிறான். நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களுக்காக அவன் மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது நரக நெருப்பாகும். info
التفاسير:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• خطر التعلق بالدنيا ونسيان الآخرة.
1. உலகத்தின்மீது மோகம்கொண்டு மறுமையை மறப்பதன் விளைவு. info

• مشيئة العبد تابعة لمشيئة الله.
2. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும். info

• إهلاك الأمم المكذبة سُنَّة إلهية.
3. மறுக்கும் சமூகங்களை அழிப்பது இறைநியதியாகும். info