அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி

external-link copy
235 : 2

وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬— وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠

235. (இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். info
التفاسير: