அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி

external-link copy
194 : 2

اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ— فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

194. (போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: