அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி

external-link copy
158 : 2

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ— فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ— وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ— فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟

158. நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் (‘கஅபா' என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜூ' அல்லது ‘உம்ரா' செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுவான், அவருடைய (எண்ணங்களை) நன்கறிவான். info
التفاسير: