د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
147 : 6

فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ ۚ— وَلَا یُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟

ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் இறைவன் விசாலமான கருணையுடையவன்; இன்னும், அவனது தண்டனை குற்றவாளிகளான மக்களை விட்டும் திருப்பப்படாது’’ info
التفاسير:

external-link copy
148 : 6

سَیَقُوْلُ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰی ذَاقُوْا بَاْسَنَا ؕ— قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَا ؕ— اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ۟

“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் இணைவைத்திருக்க மாட்டோம்; இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர் (-அனுபவித்தனர்). (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: (“நீங்கள் இவ்வாறு செய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) கல்வி (ஆதாரம்) ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வீண் சந்தேகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. இன்னும், (பொய்யை) கற்பனை செய்பவர்களாகவே தவிர நீங்கள் இல்லை.’’ info
التفاسير:

external-link copy
149 : 6

قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ ۚ— فَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்விற்கே உரியது! ஆக, அவன் (உங்களை கட்டாயப்படுத்தி நேர்வழி நடத்த) நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தியிருப்பான்.’’ info
التفاسير:

external-link copy
150 : 6

قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِیْنَ یَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ۚ— فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟۠

(நபியே!) “நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சி கூறுகின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்’’ என்று கூறுவீராக. ஆக, அவர்கள் (பொய்) சாட்சி கூறினாலும் நீர் அவர்களுடன் சாட்சி கூறாதீர். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்களுடைய ஆசைகளையும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளையும் (நபியே!) நீர் பின்பற்றாதீர். info
التفاسير:

external-link copy
151 : 6

قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ۚ— وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ ؕ— نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ ۚ— وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ— وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும், தாய் தந்தைக்கு உதவி உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும், வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இன்னும், மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானது இன்னும் மறைவானதின் பக்கம் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை செய்த உயிரை நியாயமின்றி (அதற்குரிய உரிமை இன்றி) கொல்லாதீர்கள். இவை, - நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான். info
التفاسير: