د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

external-link copy
48 : 5

وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ— لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ— اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ

இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிய (இவ்வேதத்)தின் மூலமே அவர்களுக்கு மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டுவிட்டு அவர்களுடைய மன விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு (ஷரீஅத்தை உடைய) சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்த (வேதத்)தில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் போட்டிபோட்டு முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை (அதற்கு கூலி கொடுப்பதன் மூலம் மறுமையில்) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (உண்மையை பின்பற்றியவர்கள் அல்லாஹ்வின் அருளிலும் பொய்யை பின்பற்றியவர்கள் தண்டனையிலும் இருப்பார்கள்.) info
التفاسير: