د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
24 : 48

وَهُوَ الَّذِیْ كَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ وَاَیْدِیَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَیْهِمْ ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟

அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
25 : 48

هُمُ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْیَ مَعْكُوْفًا اَنْ یَّبْلُغَ مَحِلَّهٗ ؕ— وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِیْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ بِغَیْرِ عِلْمٍ ۚ— لِیُدْخِلَ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ۚ— لَوْ تَزَیَّلُوْا لَعَذَّبْنَا الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟

(மக்காவின் குறைஷிகளாகிய) அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் (அல்லாஹ்வை பரிசுத்தமாக வணங்குவதையும் உமது தூதுத்துவத்தையும்) நிராகரித்தார்கள்; இன்னும், புனிதமான மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியை – அது தனது இடத்திற்கு (சென்று) சேர்வதையும் - அவர்கள் தடுத்தார்கள். இன்னும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்திருந்தால் (நீங்கள் அந்த மக்காவாசிகளை தாக்கும்படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிடுவதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் - கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்து நிராகரிப்பாளர்களை விட்டு) நீங்கி இருந்திருந்தால் அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை துன்புறுத்தும் தண்டனையால் தண்டித்திருப்போம். info
التفاسير:

external-link copy
26 : 48

اِذْ جَعَلَ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ قُلُوْبِهِمُ الْحَمِیَّةَ حَمِیَّةَ الْجَاهِلِیَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰی وَكَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠

நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
27 : 48

لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ— لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ— مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ— لَا تَخَافُوْنَ ؕ— فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟

திட்டவட்டமாக அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் பார்த்த) கனவை யதார்த்தத்தில் உண்மையாக நிகழ்த்திக் கொடுத்தான். அல்லாஹ் நாடினால், - பாதுகாப்பு பெற்றவர்களாக உங்கள் தலை(முடி)களை சிரைத்தவர்களாக; இன்னும், (உங்களில் சிலர்) தலை முடியை குறைத்தவர்களாக - நிச்சயமாக நீங்கள் புனிதமான மஸ்ஜிதில் நுழைவீர்கள். (அப்போது எந்த எதிரியையும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆக, (ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உள்ள நன்மைகளில்) நீங்கள் அறியாதவற்றை அவன் அறிவான். அதற்கு (-மக்காவில் உம்ராவிற்கு நுழைவதற்கு) முன்பாக சமீபமான (வேறு) ஒரு வெற்றியையும் (-ஹுதைபிய்யா உடன்படிக்கையையும் கைபர் வெற்றியையும் உங்களுக்கு) ஏற்படுத்தினான். info
التفاسير:

external-link copy
28 : 48

هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ

அவன்தான் தனது தூதரை நேர்வழி இன்னும் உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த உண்மையான மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இன்னும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير: