د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
30 : 47

وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ— وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟

இன்னும், நாம் நாடினால் அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம். ஆக, அவர்களை அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் நீர் அறிந்து கொள்வீர். இன்னும், அவர்களின் பேச்சின் தொனியிலும் அவர்களை நிச்சயமாக நீர் அறிந்துவிடுவீர். அல்லாஹ் உங்கள் (அனைவரின்) செயல்களை நன்கறிவான். info
التفاسير:

external-link copy
31 : 47

وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ— وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟

இன்னும், உங்களிலிருந்து ஜிஹாது செய்பவர்களையும் பொறுமையாளர்களையும் நாம் (அதாவது, எனது நல்லடியார்கள்) அறிகின்ற வரை நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். உங்கள் செய்திகளை (-சொல்களையும் செயல்களையும்) நாம் சோதிப்போம் (உண்மையாளர் யார், பொய்யர் யார் என்று நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக). info
التفاسير:

external-link copy
32 : 47

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ— لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ— وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟

நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ; இன்னும், நேர்வழி தங்களுக்கு தெளிவானதற்குப் பின்னர் தூதருக்கு மாறுசெய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விற்கு அறவே தீங்கிழைக்க முடியாது. இன்னும், அல்லாஹ் அவர்களின் (நல்ல) செயல்களை வீணாக்கி (மறுமையில் நற்கூலி அற்றதாக ஆக்கி) விடுவான். info
التفاسير:

external-link copy
33 : 47

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு (அவனது மார்க்க சட்டங்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு (அவருடைய கட்டளைகள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! (நிராகரிப்பினாலும் மாறு செய்வதாலும்) உங்கள் அமல்களை வீணாக்காதீர்கள்! info
التفاسير:

external-link copy
34 : 47

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟

நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ; பிறகு, அவர்களோ நிராகரிப்பாளர்களாக இருக்கின்ற நிலையில் மரணித்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். info
التفاسير:

external-link copy
35 : 47

فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ— وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ— وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟

ஆக, நீங்கள் பலவீனப்பட்டு, சமாதானத்திற்கு அழைத்து விடாதீர்கள்! நீங்கள்தான் மிக உயர்வானவர்கள் - வெற்றியாளர்கள். இன்னும், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். அவன் உங்கள் அமல்களை (அவற்றின் வெகுமதிகளை) உங்களுக்கு குறைக்கவே மாட்டான். info
التفاسير:

external-link copy
36 : 47

اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ— وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟

உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவன் உங்கள் (நன்மைகளுக்குரிய) கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை (எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்துவிடுங்கள் என்று) அவன் உங்களிடம் கேட்கமாட்டான். info
التفاسير:

external-link copy
37 : 47

اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟

அவன் அவற்றை (-உங்கள் செல்வங்களை எல்லாம் தர்மமாக) உங்களிடம் கேட்டால், உங்களை (அதற்காக) வலியுறுத்தினால் (-உங்களை சிரமப்படுத்தினால்) நீங்கள் (அவ்வாறு தர்மம் செய்ய முடியாமல்) கருமித்தனம் செய்துவிடுவீர்கள். இன்னும், அவன் உங்கள் குரோதங்களை (செல்வங்களை நேசிப்பதில் உங்கள் உள்ளங்களில் இருக்கின்ற பேராசைகளை) வெளிப்படுத்தி காண்பித்து விடுவான். info
التفاسير:

external-link copy
38 : 47

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ— وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ— وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ— وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ— ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠

நீங்கள்தான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். ஆக, உங்களில் கருமித்தனம் செய்பவரும் இருக்கிறார். எவர் கருமித்தனம் செய்வாரோ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் அவருடைய (கருமித்தனம் நிறைந்த) ஆன்மாவின் காரணமாகத்தான். (அவருடைய ஆன்மா கொடைத் தன்மையுடையதாக இருந்திருந்தால் அவர் கருமித்தனம் செய்திருக்க மாட்டார். மாறாக, அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்திருப்பார்.) அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன், யாருடைய தேவையுமற்றவன் ஆவான். நீங்கள்தான் (எல்லா வகையிலும்) தேவையுள்ளவர்கள் (ஏழைகள்) ஆவீர்கள். இன்னும், (நமது நபி முஹம்மத் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை விட்டு) நீங்கள் விலகிச்சென்றால் நீங்கள் அல்லாத ஒரு சமுதாயத்தை அவன் மாற்றி கொண்டுவருவான். பிறகு, அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள். info
التفاسير: