د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
26 : 40

وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚؕ— اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟

இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது, இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
27 : 40

وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠

மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், இன்னும் உங்கள் இறைவனிடம் விசாரணை நாளை நம்பிக்கை கொள்ளாமல் பெருமை அடிக்கிற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.” info
التفاسير:

external-link copy
28 : 40

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ— مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ— وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ— وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟

ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை - அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக - நீங்கள் கொல்கிறீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிக்கின்ற சில (தண்டனை) உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.” info
التفاسير:

external-link copy
29 : 40

یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ— فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ— قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟

“எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.” info
التفاسير:

external-link copy
30 : 40

وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ

இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
31 : 40

مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ— وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟

நூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை. info
التفاسير:

external-link copy
32 : 40

وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ

“இன்னும், என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (மக்கள் ஒருவரை ஒருவர்) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
33 : 40

یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ— مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

அந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. info
التفاسير: