د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

external-link copy
94 : 4

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ— تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ— فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ— كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) நீங்கள் பயணித்தால் (எதிரே இருப்பவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறிய நபரை நோக்கி, உலக வாழ்க்கையின் (அற்ப) செல்வத்தை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். ஆக, அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்(து உங்களை முஸ்லிம்களாக்கி கண்ணியத்தைத் தந்)தான். ஆகவே (வழியில் உங்களை சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். info
التفاسير: