د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

external-link copy
6 : 4

وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ— فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ— وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ— وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ— وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ— فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ— وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟

இன்னும், அனாதைக(ளிடம் அவர்களின் செல்வங்களை கொடுப்பதற்கு முன்னர் அவர்க)ளைச் சோதியுங்கள், இறுதியாக, அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவுத் திறமையையும் அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் அவற்றை சாப்பிடாதீர்கள் (அனுபவித்து அழித்துவிடாதீர்கள்). (அனாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அனாதையின் செல்வத்திலிருந்து தான் பயனடைவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அவசியத்திற்கேற்ப அதிலிருந்து) புசிக்கவும். ஆக, அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் (அப்போது) அவர்களுக்கு முன்னர் சாட்சிகளை வையுங்கள். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير: