د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
7 : 4

لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۪— وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ— نَصِیْبًا مَّفْرُوْضًا ۟

பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு பங்குண்டு. (அவ்வாறே) பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து பெண்களுக்கு பங்குண்டு. அ(வர்கள் விட்டுச் சென்ற)து, குறைவாக இருந்தாலும் சரி; அல்லது, அதிகமாக இருந்தாலும் சரி. அந்த பங்குகள் எல்லாம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டவை ஆகும். info
التفاسير:

external-link copy
8 : 4

وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟

இன்னும், பங்கு வைக்கப்படும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் (அங்கு) வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும் தானமாக) கொடுங்கள். இன்னும், (கொடுக்க முடியவில்லை என்றால்) அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லை சொல்லுங்கள். info
التفاسير:

external-link copy
9 : 4

وَلْیَخْشَ الَّذِیْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّیَّةً ضِعٰفًا خَافُوْا عَلَیْهِمْ ۪— فَلْیَتَّقُوا اللّٰهَ وَلْیَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟

(மரண தருவாயில் மரண சாசனம் கூறுபவரிடம் பிரசன்னமாகி இருப்பவர்கள் அவர் தனது சந்ததிகள் அல்லாத மற்ற உறவுகளுக்கும் பிற தர்மங்களுக்கும் அவரது செல்வத்தைக் கொடுக்க தூண்டி, அவரது சந்ததிகளை அவர் செல்வமின்றி விட்டுச்செல்ல நிர்ப்பந்திப்பவர்கள்) தங்கள் மரணத்திற்குப் பின்னர் தாங்கள் பலவீனமான சந்ததியை விட்டுச்சென்றால் எப்படி அவர்கள் மீது (அவர்களுக்கு செல்வங்கள் இல்லாமல் போய்விட்டால் வாழ்க்கையில் சிரமப்படுவார்களே என்று) பயப்படுவார்களோ அப்படியே (மரணத் தருவாயில் உள்ள இவரின் சந்ததிகள் விஷயத்திலும்) பயப்பட வேண்டும். ஆகவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். இன்னும், நேர்மையான சொல்லைச் சொல்லட்டும். (இறப்பவர் தனது மூன்றில் ஒன்றை மட்டுமே வாரிசுகள் அல்லாத உறவுகளுக்கு; இன்னும், நல்ல காரியங்களுக்கு கொடுக்கும்படியும்; மீதமுண்டான சொத்துக்களை சந்ததிகளுக்கு பாதுகாத்து வைக்கும்படியும் மார்க்க முறைப்படி வழிகாட்ட வேண்டும்!) info
التفاسير:

external-link copy
10 : 4

اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰی ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا ؕ— وَسَیَصْلَوْنَ سَعِیْرًا ۟۠

நிச்சயமாக, எவர்கள் அனாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும், விரைவில் அவர்கள் நரக ஜுவாலையில் எரிவார்கள். info
التفاسير:

external-link copy
11 : 4

یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ— لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ— فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ— وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ— وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ— فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ— فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ— اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ— فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு, இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இல்லாமல், இரண்டு அல்லது) இரண்டிற்கும் மேலான பெண் (பிள்ளை)களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (ஆண் பிள்ளைகளும் இல்லாமல், பெண் பிள்ளை) ஒருத்தியாக மட்டும் இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு) உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசுகளாக ஆகினால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று(ம் தந்தைக்கு மீதமுள்ள சொத்து முழுவதும்) உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது (அவருடைய) கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும்) இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير: