د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
78 : 3

وَاِنَّ مِنْهُمْ لَفَرِیْقًا یَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِ ۚ— وَیَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ— وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகிறார்கள், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. ஆனால், அது வேதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்தே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
79 : 3

مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّؤْتِیَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ یَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّیْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۟ۙ

வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு அவர் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைத் தவிர்த்து என்னை வணங்குபவர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று கூறுவதற்கு அவருக்கு அறவே உரிமையில்லை. என்றாலும், (மக்களை நோக்கி கூறியதாவது), “வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்பவர்களாக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்கின்ற இறையச்சமுள்ள பொறுப்பாளர்களாக (நல்ல வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’ info
التفاسير:

external-link copy
80 : 3

وَلَا یَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓىِٕكَةَ وَالنَّبِیّٖنَ اَرْبَابًا ؕ— اَیَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟۠

இன்னும், “மலக்குகளையும், நபிமார்களையும் வணங்கப்படும் தெய்வங்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று (அவர்) உங்களை ஏவுவதற்கும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் நிராகரிப்பை அவர் உங்களுக்கு ஏவுவாரா? info
التفاسير:

external-link copy
81 : 3

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ؕ— قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰی ذٰلِكُمْ اِصْرِیْ ؕ— قَالُوْۤا اَقْرَرْنَا ؕ— قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟

அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு எப்போது கொடுத்தாலும், (அதற்கு) பிறகு, உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; இன்னும், நிச்சயமாக அவருக்கு நீங்கள் உதவவேண்டும். (இதனை) நீங்கள் ஏற்கிறீர்களா? இதன் மீது என் உறுதியான உடன்படிக்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’’ என்று அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) கூறினான். அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்கிறோம்” எனக் கூறினார்கள். “ஆகவே, (இதற்கு) நீங்களும் சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்’’ என்று அல்லாஹ் கூறினான். info
التفاسير:

external-link copy
82 : 3

فَمَنْ تَوَلّٰی بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟

ஆக, எவர் இதற்குப் பின்னர் (புறக்கணித்து) விலகினார்களோ, அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
83 : 3

اَفَغَیْرَ دِیْنِ اللّٰهِ یَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَیْهِ یُرْجَعُوْنَ ۟

அல்லாஹ்வின் (இஸ்லாம்) மார்க்கம் அல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களோ விரும்பியும், நிர்ப்பந்தமாகவும் அவனுக்கே பணிந்தார்கள். இன்னும், (மறுமையில்) அவன் பக்கமே அவர்கள் (அனைவரும்) திரும்ப கொண்டுவரப்படுவார்கள். info
التفاسير: