د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
58 : 21

فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟

ஆக, அவர் அவற்றை (உடைக்கப்பட்ட) சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார், அவர்களுடைய பெரிய சிலையைத் தவிர. அவர்கள் அதனளவில் திரும்ப வருவதற்காக (அதை மட்டும் உடைக்காமல் விட்டுவிட்டார்). info
التفاسير:

external-link copy
59 : 21

قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: எங்கள் கடவுள்களுடன் இப்படி யார் நடந்துகொண்டார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் உள்ளவர் ஆவார். info
التفاسير:

external-link copy
60 : 21

قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ

அவர்கள் கூறினார்கள்: ஒரு வாலிபர் அவற்றை விமர்சிப்பதை நாங்கள் செவியுற்றோம். அவருக்கு இப்ராஹீம் என்று (பெயர்) சொல்லப்படும். info
التفاسير:

external-link copy
61 : 21

قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: ஆக, அவரை மக்களின் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள், (அவருக்கு கொடுக்கப்படும் தண்டனையை) அவர்கள் பார்ப்பதற்காக. info
التفاسير:

external-link copy
62 : 21

قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ

அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் இப்படி செய்தீரா? info
التفاسير:

external-link copy
63 : 21

قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ— كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟

அவர் கூறினார்: மாறாக, இதை அவர்களில் உள்ள இந்த பெரிய சிலைதான் செய்தது. ஆகவே, (உடைக்கப்பட்ட கடவுள்களாகிய) அவர்களிடமே நீங்கள் கேளுங்கள், அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால். info
التفاسير:

external-link copy
64 : 21

فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ

பிறகு, அவர்கள் தங்க(ளுக்கு)ள் (ஒருவர் மற்றவர்) பக்கம் திரும்பி (கேள்வி கேட்டுக்கொண்ட)னர். மேலும், “நிச்சயமாக (இத்தகைய சிலைகளை வணங்குகிற) நீங்கள்தான் அநியாயக்காரர்கள்” என்று (ஒருவர் மற்றவரை பார்த்துக்) கூறினார்கள். info
التفاسير:

external-link copy
65 : 21

ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ— لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟

பிறகு, அவர்கள் தலைகீழாக மாறினர். (திகைத்தனர், பின்னர் இப்ராஹீமுடைய ஆதாரத்தை வைத்தே அவரிடம்) “இவர்கள் பேச மாட்டார்கள் என்பதை நீர் திட்டவட்டமாக அறிவீர்தானே” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
66 : 21

قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ

அவர் கூறினார்: உங்களுக்கு எதையும் பலனளிக்காத, (எதையும்) தீங்கிழைக்காததையா அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகிறீர்கள்? info
التفاسير:

external-link copy
67 : 21

اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

உங்களுக்கும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களுக்கும் இழிவுதான். ஆக, நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
68 : 21

قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: அவரை எரித்து விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி) செய்பவர்களாக இருந்தால் உங்கள் கடவுள்களுக்கு (இந்த) உதவி(யை) செய்யுங்கள். info
التفاسير:

external-link copy
69 : 21

قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ

(இப்ராஹீமை அவர்கள் நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” info
التفاسير:

external-link copy
70 : 21

وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ

அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களை பெரும் நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்டோம். info
التفاسير:

external-link copy
71 : 21

وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟

இன்னும், அவரையும் லூத்தையும் அகிலத்தார்களுக்கு நாம் அதில் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் அழைத்து சென்று பாதுகாத்தோம். info
التفاسير:

external-link copy
72 : 21

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ— وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ— وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟

இன்னும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம். இன்னும், (அவருக்கு இஸ்ஹாக்கின் மகனான) யஅகூபை (நம் புறத்திலிருந்து அதிகப்படியான) அருட்கொடையாக வழங்கினோம். இன்னும், (அவர்கள்) அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம். info
التفاسير: