د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
99 : 20

كَذٰلِكَ نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ— وَقَدْ اٰتَیْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۟ۖۚ

இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். இன்னும், திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுபதேசத்தை கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
100 : 20

مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ یَحْمِلُ یَوْمَ الْقِیٰمَةِ وِزْرًا ۟ۙ

யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார். info
التفاسير:

external-link copy
101 : 20

خٰلِدِیْنَ فِیْهِ ؕ— وَسَآءَ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ حِمْلًا ۟ۙ

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அவர்கள் சுமக்கின்ற) பாவம் மறுமை நாளில் மிகக் கெட்ட சுமையாக இருக்கும். info
التفاسير:

external-link copy
102 : 20

یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ زُرْقًا ۟

எக்காளத்தில் ஊதப்படும் நாளில் (அவர்கள் தங்கள் பாவ சுமையை சுமப்பார்கள்). இன்னும், அந்நாளில் பாவிகளை, - (அவர்களின்) கண்கள் நீல நீறமானவர்களாக இருக்கின்ற நிலையில் - நாம் எழுப்புவோம். info
التفاسير:

external-link copy
103 : 20

یَّتَخَافَتُوْنَ بَیْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا ۟

அவர்கள் தங்களுக்கு மத்தியில், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை” என்று மெதுவாகப் பேசுவார்கள். info
التفاسير:

external-link copy
104 : 20

نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ اِذْ یَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِیْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا یَوْمًا ۟۠

அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம். info
التفاسير:

external-link copy
105 : 20

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ یَنْسِفُهَا رَبِّیْ نَسْفًا ۟ۙ

அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.” info
التفاسير:

external-link copy
106 : 20

فَیَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۟ۙ

ஆக, அவற்றை சமமான பூமியாக (ஆக்கி) விட்டுவிடுவான். info
التفاسير:

external-link copy
107 : 20

لَّا تَرٰی فِیْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ۟ؕ

அவற்றில் கோணலையும் வளைவையும் (மேடு பள்ளத்தையும்) நீர் காணமாட்டீர். info
التفاسير:

external-link copy
108 : 20

یَوْمَىِٕذٍ یَّتَّبِعُوْنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَهٗ ۚ— وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا ۟

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. இன்னும், சத்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். (அங்கு பாதங்களின்) மென்மையான (நடை) சத்தத்தை தவிர நீர் செவிமடுக்க மாட்டீர். info
التفاسير:

external-link copy
109 : 20

یَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِیَ لَهٗ قَوْلًا ۟

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (பிறருடைய) பரிந்துரை (எவருக்கும்) பலனளிக்காது. info
التفاسير:

external-link copy
110 : 20

یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یُحِیْطُوْنَ بِهٖ عِلْمًا ۟

அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை முழுமையாக சூழ்ந்தறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
111 : 20

وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَیِّ الْقَیُّوْمِ ؕ— وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ۟

இன்னும், என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் அடிபணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான். info
التفاسير:

external-link copy
112 : 20

وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟

இன்னும், யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (-பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது நன்மைகள்) குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார். info
التفاسير:

external-link copy
113 : 20

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفْنَا فِیْهِ مِنَ الْوَعِیْدِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ اَوْ یُحْدِثُ لَهُمْ ذِكْرًا ۟

இவ்வாறே, இ(ந்த வேதத்)தை அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். இன்னும், அதில் எச்சரிக்கையை பலவாறாக விவரித்து (கூறி) இருக்கிறோம், அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக; அல்லது அது, அவர்களுக்கு ஒரு நல்ல புத்தியை ஏற்படுத்துவதற்காக. info
التفاسير: