د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

external-link copy
177 : 2

لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ— وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ— وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ— وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ— وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ— وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟

நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்! info
التفاسير: