د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
43 : 14

مُهْطِعِیْنَ مُقْنِعِیْ رُءُوْسِهِمْ لَا یَرْتَدُّ اِلَیْهِمْ طَرْفُهُمْ ۚ— وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ۟ؕ

(அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
44 : 14

وَاَنْذِرِ النَّاسَ یَوْمَ یَاْتِیْهِمُ الْعَذَابُ فَیَقُوْلُ الَّذِیْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ— نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ— اَوَلَمْ تَكُوْنُوْۤا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍ ۟ۙ

(நபியே!) மேலும், மக்களை அவர்களுக்கு தண்டனை வரும் ஒரு நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை (வரும்) வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! நாங்கள் உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; இன்னும், தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு (உலகத்தில்) அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்(து மறுமையை நம்பா)திருக்கவில்லையா?” info
التفاسير:

external-link copy
45 : 14

وَّسَكَنْتُمْ فِیْ مَسٰكِنِ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَیَّنَ لَكُمْ كَیْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ۟

“இன்னும், நீங்கள் தங்களுக்கு தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் வசித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? மேலும், நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. இன்னும், உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.” info
التفاسير:

external-link copy
46 : 14

وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ؕ— وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ۟

மேலும், திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி அறியப்பட்டதாக இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.) info
التفاسير:

external-link copy
47 : 14

فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ

ஆக, (நபியே!) அல்லாஹ் தனது தூதர்களு(க்கு அளித்த அவனு)டைய வாக்கை மீறக்கூடியவன் என்று ஒருபோதும் நீர் நினைத்து விடாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
48 : 14

یَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَیْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟

பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாக) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில் (அவன் அநியாயக்காரர்களிடம் பழிவாங்குவான்). info
التفاسير:

external-link copy
49 : 14

وَتَرَی الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ مُّقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟ۚ

மேலும், அந்நாளில் குற்றவாளிகளை சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாக காண்பீர். info
التفاسير:

external-link copy
50 : 14

سَرَابِیْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰی وُجُوْهَهُمُ النَّارُ ۟ۙ

அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். இன்னும், அவர்களுடைய முகங்களை நரக நெருப்பு சூழ்ந்து விடும். info
التفاسير:

external-link copy
51 : 14

لِیَجْزِیَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், - அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காகவே (மறுமை நாளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களை) விசாரி(த்து கூலி கொடு)ப்பதில் மிகத் தீவிரமானவன். info
التفاسير:

external-link copy
52 : 14

هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنْذَرُوْا بِهٖ وَلِیَعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِیَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟۠

இ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்). info
التفاسير: