د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
29 : 13

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟

எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியும் கண்குளிர்ச்சியும் அழகிய மீளுமிடமும் உண்டு. info
التفاسير:

external-link copy
30 : 13

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ— قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟

(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமுதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதி காண்பிப்பதற்காக (உம்மை தூதராக அனுப்பினோம்). ஆனால், இவர்களோ ரஹ்மானை (-பேரருளாளனாகிய அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்கள். (நபியே) கூறுவீராக: “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். இன்னும், அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது.” info
التفاسير:

external-link copy
31 : 13

وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ— بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ— اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠

(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதன் மூலம் மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால் (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தின் மூலமும் அப்படி செய்யப்பட்டிருக்கும்). மாறாக, அதிகாரம் எல்லாம் அல்லாஹ்விற்குரியதே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்த) நிராகரிப்பாளர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது, அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன் சென்று) தங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான். info
التفاسير:

external-link copy
32 : 13

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟

மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டவட்டமாக கேலி செய்யப்பட்டனர். ஆக, நிராகரித்தவர்களுக்கு (அவர்களது அவகாசத்தை) நீட்டிக்கொடுத்தேன். பிறகு, (என் தண்டனையால்) அவர்களைப் பிடித்தேன். ஆக, என் தண்டனை எப்படி இருந்தது? info
التفاسير:

external-link copy
33 : 13

اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ— وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ— قُلْ سَمُّوْهُمْ ؕ— اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ— بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

ஆக, ஒவ்வோர் ஆன்மாவையும் - அது செய்ததற்கு ஏற்ப - அதை நிர்வகிப்பவன் எவ்வித சக்தியுமற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவானா? இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று உங்களால் பெயரிட முடியுமா?) அல்லது, பூமியில் அவன் அறியாததை; அல்லது, பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.)” மாறாக! நிராகரித்தவர்களுக்கு - அவர்களுடைய சூழ்ச்சி - அலங்கரிக்கப்பட்டது. இன்னும், (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். மேலும், எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு, நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
34 : 13

لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ— وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟

அவர்களுக்கு உலக வாழ்க்கையில் தண்டனை உண்டு. இன்னும், (அவர்களுக்கு) மறுமையின் தண்டனைதான் மிகச் சிரமமாக இருக்கும். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை. info
التفاسير: