د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
73 : 6

وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— وَیَوْمَ یَقُوْلُ كُنْ فَیَكُوْنُ ؕ۬— قَوْلُهُ الْحَقُّ ؕ— وَلَهُ الْمُلْكُ یَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ ؕ— عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟

6.73. அவன்தான் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டு படைத்துள்ளான். அவன் ஏதேனும் ஒன்றைப் பார்த்து ஆகிவிடு என்று கூறும் நாளில் அது ஆகிவிடும். அவன் மறுமைநாளில், ‘எழுந்திருங்கள்’ என்று கூறுவான். அவர்கள் எழுந்திருப்பார்கள். அவனது சொல் நிச்சயமாக நிறைவேறியே தீரும் உண்மையான சொல்லாகும். இஸ்ராஃபீல் இரண்டாது சூர் ஊதும் மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் நன்கறிந்தவன். தன் படைப்பில், நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன், எந்த ஒன்றும் அவனை விட்டு மறையாது. மறைவானவையும் அவனிடத்தில் வெளிப்படையானவை போன்றவையே. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الداعية إلى الله تعالى ليس مسؤولًا عن محاسبة أحد، بل هو مسؤول عن التبليغ والتذكير.
1. எவரையும் விசாரணை செய்வது அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளரின் பொறுப்பல்ல. எடுத்துரைப்பதும் அறிவுரை வழங்குவதுமே அவர் மீதுள்ள பொறுப்பாகும். info

• الوعظ من أعظم وسائل إيقاظ الغافلين والمستكبرين.
2. நல்லுபதேசம் மறதியாளர்களையும் கர்வமிக்கவர்களையும் விழிப்பூட்டும் பிரதானமான வழிகளில் ஒன்றாகும். info

• من دلائل التوحيد: أن من لا يملك نفعًا ولا ضرًّا ولا تصرفًا، هو بالضرورة لا يستحق أن يكون إلهًا معبودًا.
3. எவ்விதமான பலனுக்கோ, தீமைக்கோ, இயங்குவதற்கோ உரிமையற்றவர்கள் ஒருபோதும் வணங்கப்படும் இறைவனாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்பது அல்லாஹ் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும். info