د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
20 : 59

لَا یَسْتَوِیْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِ ؕ— اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟

59.20. நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். மாறாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களுக்கேற்ப வெவ்வேறான கூலிகளைப் பெறுவார்கள். சுவனவாசிகள்தாம் தாங்கள் விரும்பியதைப் பெற்று வெறுக்கும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்களாவர். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• من علامات توفيق الله للمؤمن أنه يحاسب نفسه في الدنيا قبل حسابها يوم القيامة.
1. மறுமை நாளின் கேள்விகணக்குக்கு முன்னரே உலகில் சுய பரிசோதனை செய்துகொள்வது அல்லாஹ் நம்பிக்கையாளனுக்கு செய்யும் உதவின் அடையாளமாகும். info

• في تذكير العباد بشدة أثر القرآن على الجبل العظيم؛ تنبيه على أنهم أحق بهذا التأثر لما فيهم من الضعف.
2.பெரும் மலையில் அல்குர்ஆன் ஏற்படுத்தும் கடும் தாக்கத்தை அடியார்களுக்கு ஞாபகமூட்டுவதன் மூலம் பலவீனமிக்க அவர்களே மிகவும் இந்தத் தாக்கத்தை உணரத் தகுதியானவர்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. info

• أشارت الأسماء (الخالق، البارئ، المصور) إلى مراحل تكوين المخلوق من التقدير له، ثم إيجاده، ثم جعل له صورة خاصة به، وبذكر أحدها مفردًا فإنه يدل على البقية.
3. (படைப்பவன், உருவாக்குபவன், உருவம் கொடுப்பவன்) ஆகிய திருநாமங்கள் படைப்பினம் உருவாக்கப்படும் கட்டங்களான, நிர்ணயித்தல், பின்பு உருவாக்குதல், பின்பு அதற்கே உரிய பிரத்தியேக தோற்றத்தை வழங்குதல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் ஒன்றை மாத்திரம் தனியாகக் குறிப்பிடுவது அது ஏனையவற்றையும் அறிவிக்கும். info