د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
25 : 57

لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ ۚ— وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟۠

57.25. நாம் தெளிவான ஆதாரங்கள், சான்றுகளைக்கொண்டு நம் தூதர்களை அனுப்பினோம். மனிதர்கள் நியாயமாக நடந்துகொள்ளும்பொருட்டு அவர்களுடன் வேதங்களையும், தராசையும் இறக்கினோம். நாம் இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான பலம் இருக்கின்றது. அதிலிருந்து ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. அதில் மக்களுக்கு அவர்களின் பணிகளிலும் தொழில்களிலும் பல பயன்களும் இருக்கின்றன. இது அல்லாஹ்வைக் காணாமல் யார் அவனுக்கு உதவி செய்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الحق لا بد له من قوة تحميه وتنشره.
1. சத்தியத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் பலம் மிகவும் அவசியமானதாகும். info

• بيان مكانة العدل في الشرائع السماوية.
2. வானுலக ஷரீஅத்துகளில் நீதியின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• صلة النسب بأهل الإيمان والصلاح لا تُغْنِي شيئًا عن الإنسان ما لم يكن هو مؤمنًا.
3. நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்லோர்களுடன் உள்ள இரத்த உறவுகள் நம்பிக்கையாளராக இல்லாத வரை எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. info

• بيان تحريم الابتداع في الدين.
4. மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. info