د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
16 : 5

یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

5.16. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் தனக்கு விருப்பமான ஈமான் மற்றும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தனது வேதனையிலிருந்து ஈடேற்றம் பெறும் வழிகளைக் காட்டுகிறான். அது சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கக்கூடிய வழிகளாகும். நிராகரிப்பு, தீமை ஆகிய இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவனை நம்புதல், அவனுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒளியின் பக்கம் செல்வதற்கு அனுமதிக்கிறான். மேலும் இஸ்லாம் என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• تَرْك العمل بمواثيق الله وعهوده قد يوجب وقوع العداوة وإشاعة البغضاء والتنافر والتقاتل بين المخالفين لأمر الله تعالى.
1. அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களின்படி செயல்படாமல் இருப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் சண்டையையும் சிலவேளை ஏற்படுத்திவிடுகின்றன. info

• الرد على النصارى القائلين بأن الله تعالى تجسد في المسيح عليه السلام، وبيان كفرهم وضلال قولهم.
2. ‘ஈஸாவின் உருவில் இறைவனே இருக்கின்றான்’ என்று கூறும் கிறிஸ்தவர்களின் தீய கொள்கை மறுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிராகரிப்பும் வழிகேடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى إن أراد أن يهلك المسيح وأمه عليهما السلام وجميع أهل الأرض فلن يستطيع أحد رده، وهذا يثبت تفرده سبحانه بالأمر وأنه لا إله غيره.
3. அல்லாஹ் ஈஸாவையும் அவரது தாயாரையும் உலகிலுள்ள அனைவரையும் அழிக்க விரும்பினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பது ஈஸா இறைவனல்ல என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். இது அவன் தனித்தே காரியமாற்றுகிறான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் நிரூபிக்கின்றது. info

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى يُذَكِّر بكونه تعالى ﴿ يَخْلُقُ مَا يَشَاءُ﴾ (المائدة: 17)، فهو يخلق من الأبوين، ويخلق من أم بلا أب كعيسى عليه السلام، ويخلق من الجماد كحية موسى عليه السلام، ويخلق من رجل بلا أنثى كحواء من آدم عليهما السلام.
4. மஸீஹ் இறைவனல்ல என்பற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் “தான் நாடியதைப் படைப்பதாக அல்லாஹ் நினைவூட்டுவதாகும்.” அவன் தாய் தந்தையிலிருந்தும் படைப்பான். ஈஸாவைப் போன்று தந்தையின்றி தாயிலிருந்து மாத்திரமும் படைப்பான். மூஸா (அலை) அவர்களது பாம்பைப் போன்று உயிரற்ற ஜடப்பொருளிலிருந்தும் படைப்பான். ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிலிருந்து படைத்ததைப் போன்று பெண் துணையின்றி ஆணிலிருந்து மாத்திரமும் படைப்பான். info