د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
38 : 47

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ— وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ— وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ— وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ— ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠

47.38. இதோ நீங்கள் உங்கள் செல்வங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் சிறிது பகுதியை செலவுசெய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவுசெய்யுமாறு அவன் உங்களிடம் வேண்டவில்லை. ஆனாலும் உங்களில் சிலர் கஞ்சத்தனத்தினால் வேண்டப்படும் தர்மத்தைத் தடுத்துக்கொள்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தில் சிறிது பகுதியை செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர் உண்மையில் தனக்கு எதிராக செலவுசெய்ததன் நன்மைகளை இழப்பதன் மூலம் கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். உங்கள் தர்மத்தின்பால் அவனுக்கு தேவைகிடையாது. நீங்களே அவனிடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு நிராகரிப்பின்பால் திரும்பினால் அவன் உங்களை அழித்துவிட்டு வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். பின்னர் அவர்கள் உங்களைப்போன்று இருக்கமாட்டார்கள். மாறாக அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• سرائر المنافقين وخبثهم يظهر على قسمات وجوههم وأسلوب كلامهم.
1. நயவஞ்சகர்களின் உளக்கிடக்கைகளும் தீய குணங்களும் அவர்களின் முகபாவனைகளிலும் பேசும் முறைகளிலும் வெளிப்பட்டுவிடும். info

• الاختبار سُنَّة إلهية لتمييز المؤمنين من المنافقين.
2. நயவஞ்சகர்களிடமிருந்து நம்பிக்கையாளர்களை வேறுபடுத்துவதற்காக சோதிப்பது இறைவனின் நியதியாகும். info

• تأييد الله لعباده المؤمنين بالنصر والتسديد.
3. அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை தன் உதவியின்மூலம் வலுப்படுத்துகிறான். info

• من رفق الله بعباده أنه لا يطلب منهم إنفاق كل أموالهم في سبيل الله.
4. அல்லாஹ் தன் அடியார்களின்மீது காட்டும் கருணை, அவன் அவர்களின் செல்வங்கள் அனைத்தையும் தன் பாதையில் செலவுசெய்யுமாறு அவர்களிடம் வேண்டவில்லை. info