د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
57 : 40

لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

40.57. பிரமாண்டமான, விசாலமான வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப் பெரியதாகும். பிரமாண்டமான அவையிரண்டையும் படைத்தவன் இறந்தவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக, அவர்களை விசாரிப்பதற்காக அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். அதனைக்கொண்டு படிப்பினை பெற மாட்டார்கள். தெளிவாக இருந்தும் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்குரிய ஆதாரமாகக் கொள்ளமாட்டார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• نصر الله لرسله وللمؤمنين سُنَّة إلهية ثابتة.
1. தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி செய்வது இறைவனின் உறுதியான வழிமுறையாகும். info

• اعتذار الظالم يوم القيامة لا ينفعه.
2. மறுமை நாளில் அநியாயக்காரன் கூறும் சாக்குப்போக்கினால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. info

• أهمية الصبر في مواجهة الباطل.
3. அசத்தியத்தை எதிர்கொள்ளும்போது பொறுமையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• دلالة خلق السماوات والأرض على البعث؛ لأن من خلق ما هو عظيم قادر على إعادة الحياة إلى ما دونه.
4. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிரமாண்டமானவற்றைப் படைத்தவன் அதனை விடச் சிறியவற்றிற்கு மீண்டும் உயிர்வழங்குவதற்கு ஆற்றல் உள்ளவன். info