د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
5 : 40

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪— وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟

40.5. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகமும் அவர்களுக்குப் பின் வந்த கூட்டத்தினரும் பொய்ப்பித்தார்கள். ஆத் சமூகம், ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள், ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியோரும் பொய்ப்பித்தார்கள். அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களிடம் வந்த தூதரைப் பிடித்து கொலைசெய்யவே நாடினார்கள். சத்தியத்தை அழிப்பதற்காக தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தார்கள். நான் அந்த சமூகங்கள் அனைத்தையும் தண்டித்தேன். நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அது கடுமையான தண்டனையாக இருந்தது. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الجمع بين الترغيب في رحمة الله، والترهيب من شدة عقابه: مسلك حسن.
1. அல்லாஹ்வின் கருணையில் ஆர்வமூட்டுதல், அவனுடைய தண்டனையின் கடுமையை விட்டும் எச்சரித்தல் ஆகிய இரண்டையும் ஒன்றுசேர மேற்கொள்வது சிறந்த வழிமுறையாகும். info

• الثناء على الله بتوحيده والتسبيح بحمده أدب من آداب الدعاء.
2.அல்லாஹ்வின் ஏகத்துவத்தைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவனது புகழைக் கொண்டு துதிப்பது பிரார்த்தனையின் ஓர் ஒழுங்காகும். info

• كرامة المؤمن عند الله؛ حيث سخر له الملائكة يستغفرون له.
3. அல்லாஹ்விடத்தில் நம்பிக்கையாளனுக்குள்ள கண்ணியத்தினால், வானவர்களை அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதில் அல்லாஹ் ஈடுபடுத்தியு்ளளான். info