د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
3 : 40

غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ذِی الطَّوْلِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— اِلَیْهِ الْمَصِیْرُ ۟

40.3. பாவம் புரிபவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவன்; தனது பாவங்களை விட்டு மீளாதவர்களைக் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்; பெரும் நலன் புரியக்கூடியவனும் அருளாளனுமாவான். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. மறுமை நாளில் அடியார்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் அவர்களுக்குரிய கூலியை வழங்கிடுவான். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الجمع بين الترغيب في رحمة الله، والترهيب من شدة عقابه: مسلك حسن.
1. அல்லாஹ்வின் கருணையில் ஆர்வமூட்டுதல், அவனுடைய தண்டனையின் கடுமையை விட்டும் எச்சரித்தல் ஆகிய இரண்டையும் ஒன்றுசேர மேற்கொள்வது சிறந்த வழிமுறையாகும். info

• الثناء على الله بتوحيده والتسبيح بحمده أدب من آداب الدعاء.
2.அல்லாஹ்வின் ஏகத்துவத்தைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவனது புகழைக் கொண்டு துதிப்பது பிரார்த்தனையின் ஓர் ஒழுங்காகும். info

• كرامة المؤمن عند الله؛ حيث سخر له الملائكة يستغفرون له.
3. அல்லாஹ்விடத்தில் நம்பிக்கையாளனுக்குள்ள கண்ணியத்தினால், வானவர்களை அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதில் அல்லாஹ் ஈடுபடுத்தியு்ளளான். info