د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
52 : 39

اَوَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

39.52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும்பொருட்டு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான் என்பதையும் தான் நாடியவர்களுக்கு அவர்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா அல்லது இறைவிதிக்கு எதிராக கோபம் கொள்கிறார்களா என்பதைச் சோதிக்கும்பொருட்டு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான் என்பதையும் இந்த இணைவைப்பாளர்கள் அறிந்துகொள்ளாமல்தான் தமது அக்கருத்தைக் கூறுகின்றனரா? நிச்சயமாக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதிலும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அல்லாஹ்வின் திட்டங்களை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு பயனடைகிறார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள் அவற்றைப் புறக்கணித்தவாறு அவற்றைக் கடந்து செல்கின்றார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• النعمة على الكافر استدراج.
1. நிராகரிப்பாளனுக்கு வழங்கப்படும் அருட்கொடை விட்டுப் பிடிப்பதாகும். info

• سعة رحمة الله بخلقه.
2. படைப்பினங்கள் மீது அல்லாஹ்வின் அருள் விசாலமானது. info

• الندم النافع هو ما كان في الدنيا، وتبعته توبة نصوح.
3. உலகில் கைசேதப்பட்டு தூய தவ்பாவுக்கு வழிவகுப்பதே பயனுள்ள கைசேதமாகும். info