د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
21 : 39

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَكَهٗ یَنَابِیْعَ فِی الْاَرْضِ ثُمَّ یُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَجْعَلُهٗ حُطَامًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟۠

39.21. நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச்செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பின்னர் அதனை ஊற்றுகளாகவும் ஆறுகளாகவும் ஓடச் செய்கிறான். பின்னர் அந்த நீரைக்கொண்டு பல்வேறு நிறமுடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர் பயிர்கள் காய்ந்துவிடுகிறது. -பார்க்கக்கூடியவனே!- பசுமையாக இருந்த பின்னர் அது மஞ்சள் நிறமாகிவிடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அது காய்ந்த பிறகு சருகுகளாகி நொறுங்கி விடுகிறது. நிச்சயமாக மேலே கூறப்பட்டவைகளிலே உயிரோட்டமான உள்ளமுடையோருக்கு நினைவூட்டல் இருக்கின்றது. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• إخلاص العبادة لله شرط في قبولها.
1. வணக்க வழிபாடு அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உளத்தூய்மை நிபந்தனையாகும். info

• المعاصي من أسباب عذاب الله وغضبه.
2. பாவங்கள் அல்லாஹ்வின் வேதனை மற்றும் கோபத்திற்கான காரணிகளாகும். info

• هداية التوفيق إلى الإيمان بيد الله، وليست بيد الرسول صلى الله عليه وسلم.
3. ஈமானின்பால் நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது தூதரின் கைவசம் இல்லை. info