د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
39 : 35

هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ ؕ— فَمَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ؕ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ۟

35.39. -மனிதர்களே!- அவனே உலகில் உங்களில் சிலரை சிலரின் வழித்தோன்றல்களாக ஆக்கியுள்ளான், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிக்கும்பொருட்டு. யார் அல்லாஹ்வையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நிராகரித்தார்களோ அதனால் ஏற்படும் பாவமும் தண்டனையும் அவரையே சாரும். நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடத்தில் கடும் வெறுப்பையே அதிகப்படுத்துகிறது. அவர்களின் நிராகரிப்பு இழப்பையே அதிகப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கைகொண்டால் கிடைக்கும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الكفر سبب لمقت الله، وطريق للخسارة والشقاء.
1. நிராகரிப்பு இறைவனின் வெறுப்புக்கான காரணியாக அமைகிறது. இழப்பு, துர்பாக்கியத்துக்கான வழியை ஏற்படுத்துகிறது. info

• المشركون لا دليل لهم على شركهم من عقل ولا نقل.
2. இணைவைப்பாளர்கள் செய்யும் இணைவைப்பிற்கு புத்தி, குர்ஆன், சுன்னா சார்ந்த எவ்வித ஆதாரமும் இல்லை. info

• تدمير الظالم في تدبيره عاجلًا أو آجلًا.
3. அநியாயக்காரனின் சூழ்ச்சி விரைவாகவோ, தாமதமாகவோ அவனுடைய அழிவுக்கு காரணமாக இருக்கின்றது. info