د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

ஸபஉ

د سورت د مقصدونو څخه:
بيان أحوال الناس مع النعم، وسنة الله في تغييرها.
அருள்கள் விடயத்தில் மனிதர்களின் நிலைகளைத் தெளிவுபடுத்தலும், அவற்றை மாற்றியமைப்பதில் அல்லாஹ்வின் வழிமுறையும் info

external-link copy
1 : 34

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِی الْاٰخِرَةِ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟

34.1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. படைத்தல், அதிகாரம், திட்டமிடல் ஆகியவற்றில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. மறுமையிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. தான் படைத்த படைப்புகளில், தன் திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• سعة علم الله سبحانه المحيط بكل شيء.
1. அனைத்தையும் சூழ்ந்த அல்லாஹ்வின் அறிவின் விசாலம். info

• فضل أهل العلم.
2. அறிஞர்களின் சிறப்பு. info

• إنكار المشركين لبعث الأجساد تَنَكُّر لقدرة الله الذي خلقهم.
3. இணைவைப்பாளர்கள், உடல்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பது அவர்களைப் படைத்த இறைவனின் ஆற்றலை மறுப்பதாகும். info