د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
76 : 3

بَلٰی مَنْ اَوْفٰی بِعَهْدِهٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟

3.76. அவர்கள் கூறியது போலல்ல. மாறாக அது பாவமாகும். அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவர்கள், மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அமானிதத்தை ஒப்படைத்தவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் ஆகியவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான். அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை வழங்கிடுவான். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• من علماء أهل الكتاب من يخدع أتباع ملتهم، ولا يبين لهم الحق الذي دلت عليه كتبهم، وجاءت به رسلهم.
1. வேதக்காரர்களிலுள்ள அறிஞர்களில் தங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றுபவர்களும் உள்ளனர். அவர்களின் வேதங்கள் கூறும், அவர்களின் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில்லை. info

• من وسائل الكفار الدخول في الدين والتشكيك فيه من الداخل.
2. இஸ்லாத்தில் நுழைந்து அதன் உள்ளேயிருந்து அதிலே சந்தேகத்தை ஏற்படுத்துவது நிராகரிப்போரின் வழிமுறைகளில் ஒன்றாகும். info

• الله تعالى هو الوهاب المتفضل، يعطي من يشاء بفضله، ويمنع من يشاء بعدله وحكمته، ولا ينال فضله إلا بطاعته.
3. அல்லாஹ்தான் வழங்கக்கூடியவன், சிறப்பினை அளிப்பவன். தான் நாடியவர்களுக்குத் தன் அருளை வழங்குகிறான். நீதி, ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே அவனது அருள் கிடைக்கும். info

• كل عِوَضٍ في الدنيا عن الإيمان بالله والوفاء بعهده - وإن كان عظيمًا - فهو قليل حقير أمام ثواب الآخرة ومنازلها.
4. ஈமானுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் பகரமாக இவ்வுலகில் பெறப்படும் அனைத்தும் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மறுமையின் நன்மைக்கும் பதவிகளுக்கும் முன்னால் அற்பமானதே. info