د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
17 : 29

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ؕ— اِنَّ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ— اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

29.17. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். அவற்றை வணக்கத்திற்குத் தகுதியானவை என்று எண்ணி நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க சக்தி பெறாது. அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேடுங்கள். அவனே வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அவனை மட்டுமே வணங்குங்கள். அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். உங்களின் சிலைகளிடம் அல்ல. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• الأصنام لا تملك رزقًا، فلا تستحق العبادة.
1. சிலைகள் வாழ்வாதாரம் அளிக்க சக்தியற்றவை. ஆகவே அவை வணக்கத்திற்குத் தகுதியானவையன்று. info

• طلب الرزق إنما يكون من الله الذي يملك الرزق.
2. வாழ்வாதாரம் அளிக்க ஆற்றலுடைய அல்லாஹ்விடமே வாழ்வாதாரம் தேட வேண்டும். info

• بدء الخلق دليل على البعث.
3. ஆரம்பமாகப் படைத்தல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும். info

• دخول الجنة محرم على من مات على كفره.
4. நிராகரித்த நிலையிலேயே மரணித்தவர் சுவனம் செல்வது தடைசெய்யப்பட்டதாகும். info