د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
78 : 28

قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ— اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ— وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟

28.78. காரூன் கூறினான்: “நிச்சயமாக என் அறிவால், ஆற்றலால்தான் இந்த செல்வங்களெல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இதற்குத் தகுதியானவன்தான்.” காரூனைவிட அதிக செல்வங்களும் பலமும் உடைய எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் செல்வங்களோ ஆற்றலோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. குற்றவாளிகளின் பாவங்களைக் குறித்து அல்லாஹ் அறிந்துவைத்திருப்பதால் அறியவேண்டும் என்று அவர்களிடம் கேட்கப்படமாட்டார்கள். கண்டிக்கும் விதமாகவே அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• كل ما في الإنسان من خير ونِعَم، فهو من الله خلقًا وتقديرًا.
1. மனிதனிடம் இருக்கின்ற நன்மைகள், அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். info

• أهل العلم هم أهل الحكمة والنجاة من الفتن؛ لأن العلم يوجه صاحبه إلى الصواب.
2. ஞானமுடையவர்களும் குழப்பங்களிலிருந்து தப்பியவர்களுமே கல்வியறிவு பெற்றவர்களாவர். ஏனெனில் கல்வி மனிதனுக்கு சரியான பாதையைக் காட்டுகிறது. info

• العلو والكبر في الأرض ونشر الفساد عاقبته الهلاك والخسران.
3.பெருமை, கர்வம், குழப்பம் ஏற்படுத்தல் என்பவற்றின் முடிவு அழிவும் நஷ்டமுமாகும். info

• سعة رحمة الله وعدله بمضاعفة الحسنات للمؤمن وعدم مضاعفة السيئات للكافر.
4. நம்பிக்கையாளனுக்கு நன்மைகளை இரட்டிப்பாக்கி நிராகரிப்பாளனுக்கு தீமைகளை இரட்டிப்பாக்காமை அல்லாஹ்வின் அருளின் விசாலத்தன்மையும் நீதமுமாகும். info