د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
57 : 28

وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ— اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

28.57. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் நம்பிக்கைகொள்ளாமல், இஸ்லாத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு பின்வருமாறு சாக்குப்போக்குக் கூறுகிறார்கள்: “நாங்கள் நீர் கொண்டுவந்த இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் நாட்டிலிருந்து எதிரிகள் எம்மை விரைவாக தூக்கிஎறிந்து விடுவார்கள்.” இந்த இணைவைப்பாளர்களுக்கு பாதுகாப்பான பூமியை நாம் வழங்கவில்லையா? அங்கு அநியாயம் செய்வதோ இரத்தம் ஓட்டுவதோ தடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களைத் தாக்குவார்கள் என்ற பயமின்றி உள்ளார்கள். நம்மிடமிருந்துள்ள வாழ்வாதாரமாக எல்லாவற்றின் விளைச்சல்களையும் அங்கு நாம் கொண்டு வரவில்லையா? அவர்களில் பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு அல்லாஹ் அவர்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை அறியாமல் இருக்கிறார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• فضل من آمن من أهل الكتاب بالنبي محمد صلى الله عليه وسلم، وأن له أجرين.
1. வேதக்காரர்களில் நபியவர்களின் மீது நம்பிக்கைகொண்டவர்களின் சிறப்பு தெளிவாகிறது. இவர்களுக்கு இரு கூலிகள் உண்டு. info

• هداية التوفيق بيد الله لا بيد غيره من الرسل وغيرهم.
2. நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. தூதர்களிடமோ மற்றவர்களிடமோ அல்ல. info

• اتباع الحق وسيلة للأمن لا مَبْعث على الخوف كما يدعي المشركون.
3. சத்தியத்தை பின்பற்றுவதால் அமைதி கிடைக்கிறது. இணைவைப்பாளர்கள் வாதிடுவது போல அது பயத்தை உண்டாக்கக்கூடியது அல்ல. info

• خطر الترف على الفرد والمجتمع.
4. உல்லாச வாழ்வினால் தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாரதூரமான விளைவு. info

• من رحمة الله أنه لا يهلك الناس إلا بعد الإعذار إليهم بإرسال الرسل.
5. அல்லாஹ்வுடைய கருணையின் வெளிப்பாடு, நிச்சயமாக அவன் காரணம் சொல்லாமல் இருப்பதற்காக தூதர்களை அனுப்பாமல் மக்களை அழிப்பதில்லை. info