د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

د مخ نمبر:close

external-link copy
85 : 28

اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ— قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

28.85. நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கி கட்டாயமாக அதனை எடுத்துரைக்கும்படியும் அதன்படி செயல்படும்படியும் கூறியவன் உம்மை மக்காவின்பால் வெற்றி பெற்றவராக திரும்பச் செய்வான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “யார் நேர்வழியைக் கொண்டு வந்துள்ளார், யார் சத்தியத்தை விட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார் என்பதை என் இறைவன் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
86 : 28

وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ

28.86. -தூதரே!- உமக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்னர் உம்மீது குர்ஆன் வஹியாக இறக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும் தன் அருளால் உம்மீது குர்ஆனை இறக்கினான். எனவே நீர் ஒருபோதும் நிராகரிப்பாளர்களின் வழிகேடுகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர். info
التفاسير:

external-link copy
87 : 28

وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ

28.87. அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறங்கிய பின்னரும் இந்த இணைவைப்பாளர்கள் அவற்றைவிட்டும் உம்மைத் திசை திருப்பிவிட வேண்டாம். நீர் அவற்றை ஓதுவதையோ எடுத்துரைப்பதையோ விட்டுவிடாதீர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளும்படியும் அவனை ஒருமைப்படுத்தும்படியும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படும்படியும் மக்களை அழைப்பீராக. அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கும் இணைவைப்பாளர்களில் ஒருவராகிவிடாதீர். மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக்கொள்கையுடையவராக இருப்பீராக. info
التفاسير:

external-link copy
88 : 28

وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫— كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ— لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠

28.88. அல்லாஹ்வுடன் வேறு இறைவனை வணங்காதீர். உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுடைய முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்துவிடக்கூடியவையே. தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவனிடம் மட்டுமே உள்ளது. அவன் தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். நீங்கள் அனைவரும் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் அவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• النهي عن إعانة أهل الضلال.
1. வழிகேடர்களுக்கு உதவுவதைத் தடைசெய்தல் info

• الأمر بالتمسك بتوحيد الله والبعد عن الشرك به.
2. ஓரிறைக் கொள்கையை உறுதியாக பற்றிக் கொண்டு இணைவைப்பை விட்டும் விலகியிருக்குமாறு ஏவுதல். info

• ابتلاء المؤمنين واختبارهم سُنَّة إلهية.
3. நம்பிக்கையாளர்களை சோதிப்பது இறைவனின் வழிமுறையாகும். info

• غنى الله عن طاعة عبيده.
4. அடியார்களின் அடிபணிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். info