د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
30 : 21

اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ— وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ— اَفَلَا یُؤْمِنُوْنَ ۟

21.30. நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. மழை இறங்குவதற்கு அவற்றிற்கிடையே எந்த இடைவெளியும் இருக்கவில்லை. எனவே நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் நாம் விலங்கு அல்லது தாவரம் ஆகிய ஒவ்வொரு பொருளையும் வானத்திலிருந்து இறங்கும் நீரால் படைத்துள்ளோம் என்பதையும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அறியவில்லையா? அவற்றைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கைகொள்ளமாட்டார்களா? info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• تنزيه الله عن الولد.
1. பிள்ளை ஏற்படுத்திக்கொள்வதைவிட்டு அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல். info

• منزلة الملائكة عند الله أنهم عباد خلقهم لطاعته، لا يوصفون بالذكورة ولا الأنوثة، بل عباد مكرمون.
2. வானவர்கள் அல்லாஹ்வை வணஹ்கி வழிபடுவதற்காகப் படைக்கபட்ட அடியார்கள் என்பதே அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள மதிப்பாகும். அவர்கள் ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ வர்ணிக்கப்பட முடியாதவர்கள். மாறாக அல்லாஹ்வின் கண்ணியமான அடியார்களாவர். info

• خُلِقت السماوات والأرض وفق سُنَّة التدرج، فقد خُلِقتا مُلْتزِقتين، ثم فُصِل بينهما.
3. படிப்படியாகவே வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் சேர்ந்ததாக படைக்கப்பட்டு பின்பு பிரிக்கப்பட்டன. info

• الابتلاء كما يكون بالشر يكون بالخير.
4. தீங்கின் மூலம் சோதனை ஏற்படுவது போன்று நலவின் மூலமும் அது ஏற்படும். info