د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
102 : 16

قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَقِّ لِیُثَبِّتَ الَّذِیْنَ اٰمَنُوْا وَهُدًی وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟

16.102. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தவறுகளோ, மாற்றங்களோ, திரிவுகளோ அற்ற சத்தியத்தைக்கொண்டு ஜீப்ரீல் அல்லாஹ்விடமிருந்து இந்த குர்ஆனை இறக்கியுள்ளார். அது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களை, புதிதாக ஒன்று இறங்கும் போதும் அதிலிருந்து ஏதேனும் ஒன்று நீக்கப்படும் போதும், அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களுக்கு அவர்கள் பெறும் சிறந்த கூலியைக் கொண்டு நற்செய்தி சொல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• العمل الصالح المقرون بالإيمان يجعل الحياة طيبة.
1. ஈமானுடன் கூடிய நற்செயல்கள் நல்வாழ்வை அளிக்கின்றன. info

• الطريق إلى السلامة من شر الشيطان هو الالتجاء إلى الله، والاستعاذة به من شره.
2. ஷைத்தானின் தீங்கிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி அல்லாஹ்விடம் புகலிடம் பெற்று அவன் மூலம் அவனது தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும். info

• على المؤمنين أن يجعلوا القرآن إمامهم، فيتربوا بعلومه، ويتخلقوا بأخلاقه، ويستضيئوا بنوره، فبذلك تستقيم أمورهم الدينية والدنيوية.
3. அல்குர்ஆனை தமது வழிகாட்டியாக எடுத்து, அதன் கல்விகளைக் கற்று, அதன் நற்குணங்களை அணிகலன்களாகக் கொண்டு, அதன் ஒளியால் பிரகாசமுற்று விளங்குவது முஃமின்கள் மீது கடமையாகும். அதன் மூலமே அவர்களது ஈருலக காரியங்களும் சீராகும். info

• نسخ الأحكام واقع في القرآن زمن الوحي لحكمة، وهي مراعاة المصالح والحوادث، وتبدل الأحوال البشرية.
4. வஹி இறங்கும் காலத்தில் அல்குர்ஆனில் சட்ட மாற்றம் இடம்பெற்றதற்கு ஒரு நோக்கமுண்டு. நலன்களையும் நிகழ்வுகளையும் மனித நிலமைகள் மாறுபடுவதையும் கவனத்தில் கொள்வதே அந்நோக்கமாகும். info