د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
34 : 11

وَلَا یَنْفَعُكُمْ نُصْحِیْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یُّغْوِیَكُمْ ؕ— هُوَ رَبُّكُمْ ۫— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟ؕ

11.34. நேரான பாதையை விட்டு அல்லாஹ் உங்களை வழிகெடுக்க நாடினால், உங்களின் பிடிவாதத்தின் காரணமாக அவன் நேர்வழியை விட்டும் உங்களைக் கைவிட விரும்பினால் என் அறிவுரையும் நினைவூட்டலும் உங்களுக்குப் பயனளிக்காது. அவனே உங்களின் இறைவன். உங்களின் விவகாரங்களுக்கு அவனே அதிபதியாவான். எனவே அவன் நாடினால் உங்களை வழிதவறச் செய்து விடுவான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• عفة الداعية إلى الله وأنه يرجو منه الثواب وحده.
1. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவரது பக்குவமும், நிச்சயமாக அவர் அல்லாஹ் ஒருவனிடமே கூலியை எதிர்பார்ப்பார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. info

• حرمة طرد فقراء المؤمنين، ووجوب إكرامهم واحترامهم.
2. நம்பிக்கைகொண்ட ஏழைகளை ஒருபோதும் விரட்டிவிடுவது ஹராமாகும். அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டியது கடமையாகும். info

• استئثار الله تعالى وحده بعلم الغيب.
3. மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ் ஒருவனிடமே உள்ளது. info

• مشروعية جدال الكفار ومناظرتهم.
4. நிராகரிப்பாளர்களுடன் விவாதம் புரியலாம். info