د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
75 : 10

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟

10.75. இந்த தூதர்கள் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் எகிப்தின் அரசன் பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பினோம். ஆனால் பிர்அவ்னும் அவன் சமூகத்தினரும் அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை மறுத்ததனாலும் குற்றவாளிகளாக இருந்தார்கள். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• سلاح المؤمن في مواجهة أعدائه هو التوكل على الله.
1. நம்பிக்கையாளன் தன் எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஆயுதம் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதேயாகும். info

• الإصرار على الكفر والتكذيب بالرسل يوجب الختم على القلوب فلا تؤمن أبدًا.
2. நிராகரிப்பிலும் தூதர்களை மறுப்பதிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதனால், எப்பொழுதுமே நம்பிக்கை கொள்ள முடியாதவாறு, உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விடும். info

• حال أعداء الرسل واحد، فهم دائما يصفون الهدى بالسحر أو الكذب.
3. தூதர்களின் எதிரிகளுடைய நிலை ஒன்றே. அவர்கள் எப்பொழுதும் நேர்வழியை சூனியம் அல்லது பொய் என்பதாகவே வர்ணிப்பார்கள். info

• إن الساحر لا يفلح أبدًا.
4. நிச்சயமாக சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டான். info