ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
10 : 48

اِنَّ الَّذِیْنَ یُبَایِعُوْنَكَ اِنَّمَا یُبَایِعُوْنَ اللّٰهَ ؕ— یَدُ اللّٰهِ فَوْقَ اَیْدِیْهِمْ ۚ— فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا یَنْكُثُ عَلٰی نَفْسِهٖ ۚ— وَمَنْ اَوْفٰی بِمَا عٰهَدَ عَلَیْهُ اللّٰهَ فَسَیُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟۠

நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் (-விசுவாச உறுதிமொழி) செய்தார்களோ அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் இருக்கிறது. ஆகவே, யார் (அந்த உறுதி மொழியை) முறிப்பாரோ அவர் முறிப்பதெல்லாம் தனக்கு எதிராகத்தான். (-அது அவருக்குத்தான் கேடாகும்.) இன்னும், யார் அல்லாஹ்விடம் எதன் மீது ஒப்பந்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவாரோ அவருக்கு அவன் மகத்தான கூலியை (-சொர்க்கத்தை) கொடுப்பான். info
التفاسير:

external-link copy
11 : 48

سَیَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَاۤ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ— یَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— قُلْ فَمَنْ یَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ— بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

11 கிராமவாசிகளில் (போருக்கு வராமல்) பின் தங்கியவர்கள் உமக்கு கூறுவார்கள்: “எங்களை எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் (போருக்கு செல்ல முடியாதபடி மற்ற அலுவல்களில்) ஈடுபடுத்திவிட்டன. (எனவேதான் போரில் நாங்கள் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லை.) ஆகவே, நீர் எங்களுக்காக (உமது இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோருவீராக!” அவர்கள் தங்கள் நாவுகளினால் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஆக, அல்லாஹ் உங்களுக்கு ஏதும் தீங்கை நாடினால் (அதை தடுப்பதற்கு); அல்லது, உங்களுக்கு ஏதும் நன்மையை நாடினால் (அதை நிறுத்துவதற்கு) அல்லாஹ்விடம் உங்களுக்காக சிறிதும் யார் உரிமை பெறுவார்? (யாருக்கும் அந்த சக்தி இல்லை.) மாறாக, அல்லாஹ் நீங்கள் செய்வதை (எல்லாம்) ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
12 : 48

بَلْ ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰۤی اَهْلِیْهِمْ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِكَ فِیْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ— وَكُنْتُمْ قَوْمًا بُوْرًا ۟

மாறாக, தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு ஒருபோதும் திரும்பவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினீர்கள். இ(ந்த எண்ணமான)து உங்கள் உள்ளங்களில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. (அல்லாஹ், தன் தூதருக்கு உதவமாட்டான் என்று அல்லாஹ்வின் மீது) நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணினீர்கள். (இந்த தீய எண்ணத்தால் அல்லாஹ்வின் தண்டனையில்) நீங்கள் அழிந்து நாசமாகக்கூடிய மக்களாக இருக்கின்றீர்கள். info
التفاسير:

external-link copy
13 : 48

وَمَنْ لَّمْ یُؤْمِنْ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَعِیْرًا ۟

எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வில்லையோ நிச்சயமாக நாம் (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை தயார் செய்திருக்கிறோம். info
التفاسير:

external-link copy
14 : 48

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟

வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுகிறவர்களை மன்னிக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை தண்டிக்கிறான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
15 : 48

سَیَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰی مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ— یُرِیْدُوْنَ اَنْ یُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ— قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ— فَسَیَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ؕ— بَلْ كَانُوْا لَا یَفْقَهُوْنَ اِلَّا قَلِیْلًا ۟

நீங்கள் கனீமத்துகளை (-போரில் கைப்பற்றப்பட்ட செல்வங்களை) நோக்கி அவற்றை நீங்கள் எடுப்பதற்காக சென்றால், “எங்களை விடுங்கள்! நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று (போருக்கு வராமல்) பின்தங்கியவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் பேச்சை (-வாக்கை) அவர்கள் மாற்றிவிட நாடுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் அறவே எங்களை பின்பற்ற மாட்டீர்கள். இப்படித்தான் இதற்கு முன்னரே (இதைப் பற்றி) அல்லாஹ் (எங்களுக்கு) கூறி இருக்கிறான்.” “இல்லை, நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். மாறாக, குறைவாகவே தவிர அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை) விளங்காதவர்களாக இருக்கிறார்கள். info
التفاسير: