ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
62 : 24

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ— اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ— فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அவர்கள் கூறிய எல்லா விஷயங்களிலும்) உண்மைப்படுத்தியவர்கள்தான். இன்னும், அவர்கள் (-தூதருடன் போர், தொழுகை, ஆலோசனை போன்ற) ஒரு பொது காரியத்தில் அவருடன் இருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் (அங்கிருந்து) அவர்கள் செல்லமாட்டார்கள். நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள், அவர்கள்தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தியர்கள் ஆவார்கள். ஆக, அவர்கள் உம்மிடம் தங்களின் சில காரியத்திற்கு அனுமதி கேட்டால் அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி அளிப்பீராக. இன்னும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
63 : 24

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ— قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ— فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக) பிரார்த்திப்பதை உங்களில் சிலர் சிலருக்கு (எதிராக) பிரார்த்திப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய பிரார்த்தனை கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை திட்டமாக அல்லாஹ் நன்கறிவான். ஆக, அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைந்துவிடுவதை; அல்லது, வலி தரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைந்துவிடுவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும். info
التفاسير:

external-link copy
64 : 24

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قَدْ یَعْلَمُ مَاۤ اَنْتُمْ عَلَیْهِ ؕ— وَیَوْمَ یُرْجَعُوْنَ اِلَیْهِ فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்விற்கே சொந்தமானவையாகும். திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிவான். இன்னும், (நபியின் கட்டளைக்கு மாறுசெய்த) அவர்கள் அந்நாளில் அவனிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது, ஆக, அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: