ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
6 : 2

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
7 : 2

خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠

அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் செவியின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) பெரிய தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
8 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ

இன்னும், “நாங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை. info
التفاسير:

external-link copy
9 : 2

یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ

அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களைத் தாமே தவிர (பிறரை) ஏமாற்றவில்லை. இன்னும், (இதை) அவர்கள் உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
10 : 2

فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟

அவர்களின் உள்ளங்களில் ஒரு (சந்தேக) நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் (சந்தேக) நோயை அதிகப்படுத்தினான். இன்னும், அவர்கள் பொய் கூறுபவர்களாக இருக்கின்ற காரணத்தால் துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
11 : 2

وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟

இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்” என்று கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
12 : 2

اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟

அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள்.” எனினும், அவர்கள் (அதை) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
13 : 2

وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟

இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
14 : 2

وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟

இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய மனித) ஷைத்தான்களிடம் சென்று (அவர்களுடன்) தனிமையில் இருந்தாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்களெல்லாம் (அவர்களை) கேலி செய்பவர்கள்தான்” என்று கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
15 : 2

اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவைக்கிறான். info
التفاسير:

external-link copy
16 : 2

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟

அவர்கள் எத்தகையோர் என்றால் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆகவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை. info
التفاسير: