ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

external-link copy
4 : 13

وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫— وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

மேலும், பூமியில் ஒன்றுக்கொன்று சமீபமான பகுதிகள் உள்ளன. (ஆனால், அவை தன்மைகளால் மாறுபட்டவை ஆகும்.) இன்னும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், ஒரே வேரிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முளைக்கின்ற பேரீச்சமும்; இன்னும், ஒரு வேரிலிருந்து ஒரே ஒரு மரம் முளைக்கின்ற பேரீச்சமும் உள்ளன. இவை (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகின்றன. ஆனால், அவற்றில் சிலவற்றை, சிலவற்றைவிட சுவையில் சிறப்பிக்கிறோம். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும்) அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير: