ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
13 : 11

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

அல்லது, அவர் இதை இட்டுக்கட்டினார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (உங்களால்) இட்டுக்கட்டப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு யாரை (எல்லாம் அழைக்க) இயலுமோ அவர்களை (எல்லாம் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
14 : 11

فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟

ஆக, “(இணைவைப்பாளர்களே! நீங்கள் அழைத்த) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், (இன்னும், நீங்களும் அவர்களும் இந்த வேதத்தை போன்றதை உருவாக்க முடியவில்லை எனில்) இ(ந்த வேதமான)து இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று நபியே அவர்களிடம் கூறுவீராக!) info
التفاسير:

external-link copy
15 : 11

مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟

எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
16 : 11

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ— وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை. இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்து விடும். இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே. info
التفاسير:

external-link copy
17 : 11

اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ— فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ— اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

ஆக, எவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவான அத்தாட்சியின் மீது இருக்கிறார்களோ; இன்னும், - அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓதிக் கொண்டிருக்கிறாரோ: இன்னும், அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ - அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். இன்னும், (ஏனைய) கூட்டங்களிலிருந்து எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாக இருக்கும். ஆகவே, (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த உண்மைதான்! எனினும், மக்களில் அதிகமானோர் (இதை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
18 : 11

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ— اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ— اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களை விட மகா அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது) “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது இறங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
19 : 11

الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், அதில் கோணலைத் தேடுகிறார்கள். இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். info
التفاسير: