ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
11 : 87

وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ

87.11. நிராகரிப்பாளன் அறிவுரை பெறுவதை விட்டும் தூரமாகி விரண்டோடுகிறான். ஏனெனில் நிச்சயமாக அவன் நரகில் நுழைவதால் மறுமை நாளில் அவனே மக்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக இருப்பான். info
التفاسير:

external-link copy
12 : 87

الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ

87.12. அவன் பெரும் நரக நெருப்பில் வீழ்வான். அதன் வெப்பத்தை என்றென்றும் அனுபவிப்பான். info
التفاسير:

external-link copy
13 : 87

ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ

87.13. பின்னர் அவன் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். அவன் அனுபவிக்கும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனால் மரணிக்கவும் முடியாது, நல்ல கண்ணியாமாக முறையில் உயிர் வாழவும் முடியாது. info
التفاسير:

external-link copy
14 : 87

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ

87.14. இணைவைப்பு மற்றும் பாவங்களைவிட்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வேண்டியதைப் பெற்று வெற்றியடைந்து விட்டார். info
التفاسير:

external-link copy
15 : 87

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ

87.15. அவர் தம் இறைவன் அனுமதித்த நினைவூட்டல்களைக்கொண்டு அவனை நினைவுகூர்ந்தார், நிறைவேற்றுமாறு வேண்டப்பட்ட முறையில் தொழுகையை நிறைவேற்றினார். info
التفاسير:

external-link copy
16 : 87

بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ

87.16. மாறாக மறுமைக்கும் இம்மைக்கும் மத்தியில் பாரிய ஏற்றத்தாழ்வு இருந்தும் நீங்கள் மறுமையை தேர்ந்தெடுப்பதை விட இவ்வுலக வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
17 : 87

وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ

87.17. இவ்வுலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்களை விட மறுமையே சிறந்தது, நிலையானது. ஏனெனில் மறுமையின் இன்பங்கள் நிலையானது, என்றும் முடிவடையாதது. info
التفاسير:

external-link copy
18 : 87

اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ

87.18. நிச்சயமாக நாம் உங்களுக்கு நினைவூட்டிய இக்கட்டளைகளும் செய்திகளும் அல்குர்ஆனுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதங்களில் (ஆகமங்களில்) உள்ளவையாகும்.
info
التفاسير:

external-link copy
19 : 87

صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠

87.19. அவை இப்ராஹீம் மற்றும் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதங்களாகும் (ஆகமங்களாகும்). info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும். info

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. info