ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

அல்முனாபிகூன்

ߝߐߘߊ ߟߊߢߌߣߌ߲ ߘߏ߫:
بيان حقيقة المنافقين والتحذير منهم.
நயவஞ்சகர்களின் யதார்த்தத்தைத் தெளிபடுத்தி அவர்களை விட்டும் எச்சரித்தல் info

external-link copy
1 : 63

اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ— وَاللّٰهُ یَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ— وَاللّٰهُ یَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِیْنَ لَكٰذِبُوْنَ ۟ۚ

63.1. -தூதரே!- உம்முடைய அவைக்கு நிராகரிப்பை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் நயவஞ்சகர்கள் வந்தால் “நிச்சயமாக நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நீர் அவனின் தூதர்தான் என்பதை அறிவான். நிச்சயமாக இந்த நயவஞ்சர்கள் தமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீர் அவனின் தூதர் என ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறும் வாதத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• وجوب السعي إلى الجمعة بعد النداء وحرمة ما سواه من الدنيا إلا لعذر.
1. ஜுமுஆவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டவுடன் அதன்பால் விரைவது கட்டாயமாகும். தகுந்த காரணமின்றி உலக அலுவல் எதிலும் ஈடுபடுவது ஹராமாகும். info

• تخصيص سورة للمنافقين فيه تنبيه على خطورتهم وخفاء أمرهم.
2. நயவஞ்சகர்களைப்பற்றி மாத்திரம் குறிப்பிடுவதற்கு தனியொரு அத்தியாயத்தை அருளியிருப்பது அவர்களின் பாரதூரத்துக்கும் மறைவான தன்மைக்கும் சான்றாகும். info

• العبرة بصلاح الباطن لا بجمال الظاهر ولا حسن المنطق.
3. உள்ரங்கம் சீராகுவதே கவனத்தில் கொள்ளப்படுமே தவிர அழகான தோற்றமோ, நாவன்மையோ அல்ல. info