ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
29 : 57

لِّئَلَّا یَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟۠

57.29. -நம்பிக்கையாளர்களே!- நாம் உங்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள இரட்டிப்பான நன்மையின் மூலம் நமது மகத்தான அருளை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம். இது வேதம் வழங்கப்பட்ட முன்சென்ற யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் அருளைத் தாம் நாடியவர்களுக்கு வழங்கி நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு தாங்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து எதற்கும் சக்தி பெற்றவர்கள் அல்ல என்பதை அறிந்து, அல்லாஹ்விடமே அருள் உள்ளது, அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு வழங்காமல் தடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். அவன் மாபெரும் அருளாளனாவான். தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الحق لا بد له من قوة تحميه وتنشره.
1. சத்தியத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் பலம் மிகவும் அவசியமானதாகும். info

• بيان مكانة العدل في الشرائع السماوية.
2. வானுலக ஷரீஅத்துகளில் நீதியின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• صلة النسب بأهل الإيمان والصلاح لا تُغْنِي شيئًا عن الإنسان ما لم يكن هو مؤمنًا.
3. நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்லோர்களுடன் உள்ள இரத்த உறவுகள் நம்பிக்கையாளராக இல்லாத வரை எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. info

• بيان تحريم الابتداع في الدين.
4. மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. info